சென்னை, சாலிகிராமம், புஷ்பா காலனி பகுதியைச் சேர்ந்தவர் முன்னாள் திரைப்பட நடிகை மாயா (வயது 60). இவர் கர்ஜனை, அமர காவியம் உள்ளிட்ட ஏாளமான திரைப்படங்களில் நடித்து உள்ளார்.
நடிகையின் கார் கண்ணாடியை உடைத்த அடையாளம் தெரியாத நபர்கள்! - லேட்டஸ்ட் சினிமா செய்திகள்
முன்னாள் திரைப்பட நடிகையின் விலை உயர்ந்த கார் கண்ணாடியை உடைத்துச் சென்ற நபர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
முன்னாள் நடிகை
இவர் தனக்கு சொந்தமான ஐந்து லட்சம் மதிப்பிலான காரை வழக்கம் போல் தனது வீட்டருகே நேற்று நிறுத்தி வைத்துள்ளார்.
இந்நிலையில், அடையாளம் தெரியாத சில நபர்கள் திடீரென்று இவரது கார் கண்ணாடியை உடைத்து விட்டு தப்பி ஓடியுள்ளனர். இது குறித்து விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் மாயா புகார் அளித்ததன் அடிப்படையில், காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து அங்குள்ள சிசிடிவி காட்சிகள் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.