தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

மிஷ்கின் தயாரிக்கும் 'பிதா' படத்தின் பூஜை தொடக்கம் - பிதா திரைப்படம் பூஜை தொடக்கம்

இயக்குநர் மிஷ்கின் தயாரிப்பில் ஆதித்யா இயக்கும் 'பிதா' திரைப்படத்தின் பூஜை இன்று (ஜூலை 6) நடைபெற்றது.

myskkin producing pitha movie pooja beguns
myskkin producing pitha movie pooja beguns

By

Published : Jul 6, 2020, 7:22 PM IST

இயக்குநர் மிஷ்கின், ஸ்ரீ கிரீன் சரவணன், மாலிக் ஸ்ட்ரீம் கார்ப்பரேஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் 'பிதா'. 'சவரக்கத்தி' திரைப்படத்தில் இயக்குநராக அறிமுகமான ஆதித்யா இந்தப் படத்தை இயக்குகிறார். இந்தத் திரைப்படத்தின் தொடக்க விழா மிக எளிமையாக இன்று நடைபெற்றது. இதில் நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் கலந்துகொண்டனர்.

இது குறித்து படக்குழுவினர் கூறுகையில், "இது ஒரு தந்தைக்கும், மகளுக்குமான உறவை மையமாகக்கொண்டு உருவாகும் த்ரில்லர் திரைப்படமாகும். காணாமல்போன தன் மகளை கண்டுபிடித்தே ஆக வேண்டும் என்று தீவிரமாக தேடும் ஒரு தந்தையின் வலியை பதிவு செய்யும் படமாக இது உருவாகிறது.

பாக்ஸர் படத்தில் வில்லனாக அறிமுகமாகும் எக்ஸெட்ரா என்டர்டெயின்மெண்ட் படத் தயாரிப்பாளர் மதியழகன், 'பிதா' படத்திலும் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

கலையரசன், ஆர்.ஜே.ரமேஷ் திலக், அனு கீர்த்தி வாஸ், ராதா ரவி ஆகியோருடன் சில முக்கிய நடிகர்களும் நடிக்க இருக்கின்றனர். பிரபல நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களுடன் பேச்சுவார்த்தை நடந்துவருகிறது" என படக்குழு தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க...'அஞ்சாதே' இரண்டாம் பாகத்தில் அருண் விஜய்?

ABOUT THE AUTHOR

...view details