'துப்பறிவாளன்' திரைப்படம் கடந்த 2017ஆம் ஆண்டு வெளியானது. இதில் விஷால் உடன் பிரசன்னா, ஆண்ட்ரியா, வினய், பாக்கியராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
'துப்பறிவாளன் 2' உறுதியானது! - மிஷ்கின்
மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்து வெளியான 'துப்பறிவாளன்' படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. தற்போது இதன் இரண்டாம் பாகம் தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் 'துப்பறிவாளன்' படத்தின் இரண்டாம் பாகத்தை மிஷ்கின் தொடங்க இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. செப்டம்பர் மாதத்தில் இதன் படப்பிடிப்பு தொடங்குகிறது.
மேலும், இப்படத்தின் ப்ரீ-ப்ரொடக்ஷன் வேலைக்காக மிஷ்கின் லண்டனில் உள்ளார். 'துப்பறிவாளன் 2' படத்தை விஷால் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிக்கவுள்ளது. இதற்கிடையில், இரண்டாம் பாகம் குறித்தான அறிவிப்பை நடிகர் பிரசன்னா அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். விரைவில் இது தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.