நடிகர் அஜித் குமார், தற்போது ஹெச். வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். யுவன் இசை அமைத்துள்ளார்.
இதன் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தில் உள்ளது. தற்போது, ஒரு சண்டை காட்சி மட்டுமே பாக்கி உள்ளது. அதனை அடுத்த மாதம் ரஷ்யாவில் எடுத்திடப் படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அக்டோபரில் படப்பிடிப்பு
இந்நிலையில் இப்படத்தைத் தொடர்ந்து மீண்டும் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ளார் என்ற தகவல் கசிந்துள்ளது. இப்படத்தையும் போனி கபூரே தயாரிக்கவுள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபரில் தொடங்க உள்ளதாகவும், முதற்கட்டமாக ஹைதராபாத், புதுச்சேரியில் படப்பிடிப்பு நடைபெற உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
களமிறங்கும் ஜிப்ரான்
அஜித் படத்திற்கு பொதுவாக யுவன் ஷங்கர் ராஜா இசை அமைப்பது வழக்கம். வலிமை படத்திற்கும் யுவன்தான் இசையமைக்கிறார். ஆனால், இம்முறை தல 61 படத்திற்கு ஜிப்ரான் இசை அமைக்க உள்ளதாக கூறப்படுகிறது.
போனி கபூர், எச்.வினோத், அஜித் கூட்டணியில் 2019 ஆம் ஆண்டு நேர்கொண்ட பார்வை திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது அதே கூட்டணி தான், வலிமை திரைப்படத்தில் இணைந்துள்ளனர்.
மூன்றாவது முறையாக கூட்டணி
இந்நிலையில், மூன்றாவது முறையாக இதே கூட்டணி ஒன்று சேரவுள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
முதல் இரண்டு படங்களிலும் யுவன் இசையமைத்த நிலையில், தற்போது ஜிப்ரானின் என்ட்ரி ரசிகர்களைக் குஷியில் ஆழ்த்தியுள்ளது. இருப்பினும், இதுதொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வெளியாகவில்லை.
இதையும் படிங்க:ட்ரிபிள் ஆக்ஷன்ல தரமான சம்பவம்..!