தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

இளையராஜாவின் காலில் விழுந்த காவலாளி...! அதிர்ச்சியில் ரசிகர்கள் - இசை நிகழ்ச்சி

சென்னை: இசை நிகழ்ச்சியின்போது இடையூறு செய்ததாகக் கூறி காவலாளியை பலவந்தமாக இளையராஜாவின் காலில் விழவைத்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

File pic

By

Published : Jun 3, 2019, 11:29 AM IST

Updated : Jun 3, 2019, 11:53 AM IST

இசையமைப்பாளர் இளையராஜாவின் 76ஆவது பிறந்த நாளையொட்டி பிரமாண்ட இசை நிகழ்ச்சி சென்னை பூந்தமல்லியில் உள்ள ஈவிபி ஃபிலிம் சிட்டியில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் ஏராளமான இசைக்கலைஞர்கள், பின்னணி பாடகர்கள், வெளிநாட்டு இசைக் கலைஞர்கள் என ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சி நடைபெற்றுகொண்டிருக்கையில் காவலாளி ஒருவர் இசைக் கலைஞர்களுக்கு தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தார். இதைக் கண்ட இளையராஜா பாடல் பாடிக்கொண்டிருந்த பாடகர்களை பாதியில் நிறுத்தச் சொல்லியுள்ளார்.

இதையடுத்து, இளையராஜா அந்தக் காவலாளியை பார்த்து, 'நீ யார்? மேடையில் உனக்கு என்ன வேலை. பாடலை கேட்கவிடாமல் இடைஞ்சல் செய்து கொண்டிருக்கிறாய். தண்ணீர் தாகமாக இருக்கிறது என்று இசைக்கலைஞர்கள் கேட்டார்கள் என்றால் நீ ஸ்டேஜுக்கு வர வேண்டுமா?

உங்களுக்காக நான் இசை நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருக்கின்ற வேளையில் இதுபோன்ற செயல்கள் செய்வதற்கு உங்களுக்கு எப்படி மனம் வருகிறது. என் பாடலில்தான் நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் என்னுடைய பாடலில்தான் உங்கள் வாழ்க்கை முழுக்க போய்க்கொண்டிருக்கிறது.

அப்படி என்றால் நீங்கள் இந்த நிகழ்ச்சியை எப்படி ரசிக்க வேண்டும். இப்படி சிறுசிறு இடைஞ்சல்கள் செய்யாதீர்கள்' என்று கூறினார்.

இதனை அடுத்து பாடகர் மனோ, அந்த காவலாளியிடம், 'இளையராஜாவின் காலில் விழுந்து மன்னிப்புக் கேளுங்கள்' என்று கூறி அவரை பலவந்தமாக வற்புறுத்தினார். இந்தச் செயல் நிகழ்ச்சிக்கு வந்திருந்த ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை உண்டாக்கியது.

Last Updated : Jun 3, 2019, 11:53 AM IST

ABOUT THE AUTHOR

...view details