தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'கண்ணான கண்ணே' பாடல் உருவான விதம் - 8 நிமிட காணொலி வெளியிட்ட டி இமான் - கண்ணான கண்ணே பாடல்

தந்தை - மகள் பாசத்தை எடுத்துரைக்கும் பாடல்களில் ஒன்றாகத் திகழும் கண்ணான கண்ணே பாடலின் 8 நிமிட மேக்கிங் காணொலியை இசையமைப்பாளர் டி. இமான் வெளியிட்டுள்ளார்.

Music director D. Imman shares making video of Kannana Kanney
Thala ajith in Kannana kanney song

By

Published : Mar 18, 2020, 2:42 PM IST

சென்னை: ரசிகர்கள் மனதைக் கவர்ந்த பாடலாக அமைந்த கண்ணான கண்னே பாடல் உருவான விதத்தின் காணொலியை இசையமைப்பாளர் டி. இமான் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

தல அஜித் நடிப்பில் 2019ஆம் ஆண்டு பொங்கல் வெளியீடாக வெளிவந்த படம் விஸ்வாசம். இந்தப் படத்தில் மகள் மீது தந்தை வெளிப்படுத்தும் பாசத்தை காட்டும்விதமாக அமைந்திருந்த கண்ணான கண்ணே பாடல் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்து, பட்டிதொட்டியெங்கும் சூப்பர் ஹிட்டானது.

யூ-ட்யூப்பில் உள்ள இந்தப் பாடலின் லிரிக் (பாடல் வரிகள் அமைந்த) காணொலி இதுவரை 112 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது.

ஆண்டின் சிறந்த பாடல்கள் பட்டியலில் முன்னணி இடத்தைப் பிடித்த இப்பாடலுக்கு டி. இமான் இசையமைத்துள்ள நிலையில், பாடகர் சித் ஸ்ரீராம் பாடியுள்ளார். பாடல் வரிகளை பாடலாசிரியர் தாமரை எழுதியுள்ளார்.

தந்தை - மகள் பாசம் குறித்த தமிழ் சினிமா பாடல்களில் தனியொரு இடத்தைப் பிடித்திருக்கும் இந்தப் பாடல் உருவான விதத்தின் காணொலியை இசையமைப்பாளர் டி. இமான் தனது ட்விட்டரில் பகிரிந்துள்ளார்.

நான்கு நிமிடம் ஓடக்கூடிய பாடலின், 8 நிமிடம் மேக்கிங் காணொலியில் பாடல் கம்போஸ் செய்யப்பட்டவிதம், பாடகர்கள் பாடியது, பாடலசிரியர் தாமரை பாடல் வரிகளை எழுதியது எனப் பாடல் உருவாவதற்குப் பின்புலமாக இருந்த அனைத்து விஷயங்களும் இடம்பிடித்துள்ளன.

கண்ணான கண்ணே பாடல் உருவான விதத்தை ரசிகர்கள் பார்த்து ரசிப்பதுடன், பகிர்ந்தும்வருகின்றனர்.

இதையும் படிங்க: 'அண்ணாத்த' பின்னணி இசையை நேரடியாக வாசித்துக் காண்பித்த டி.இமான்

ABOUT THE AUTHOR

...view details