தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ஓடி விளையாடு பாப்பா! - ஆழ்துளைக் கிணறு பற்றி இமான் ட்வீட் - இசையமைப்பாளர் இமான் ட்வீட்

ஆழ்துளைக் கிணறு விவகாரம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுதொடர்பாக இசையமைப்பாளர் இமான் ட்வீட் செய்துள்ளார்.

D Imman

By

Published : Oct 30, 2019, 1:44 PM IST

திருச்சி மணப்பாறை அடுத்த நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து 2 வயது குழந்தை சுஜித் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இதுபோன்ற துயரம் நிறைந்த சம்பவம் இனி நடக்காமல் இருக்க அனைவரும் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என அரசியல் பிரமுகர்கள், திரையுலகினர், சமூக செயற்பாட்டாளர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இசையமைப்பாளர் இமான்

இதனிடையே இசையமைப்பாளர் இமான் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், 'ஓடி விளையாடு பாப்பா! இங்கு மூடப்படாத ஆழ்துளைக் கிணறுகள் இல்லையடி பாப்பா! என்கிற நிலை விரைவில் வரட்டும்' என குறிப்பிட்டிருக்கிறார்.

முன்னதாக, தமிழ்நாடு முழுவதும் திறந்த நிலையில் இருக்கும் ஆழ்துளைக் கிணறுகளை மூட அரசு உத்தரவிட்டதை அடுத்து, படிப்படியாக அதற்கான பணிகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க...

'இந்த மரணத்தோடு முடியட்டும் பிஞ்சுச் சாவுகள்' - வைரமுத்து உருக்கம்

ABOUT THE AUTHOR

...view details