தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

மும்பை காவல்துறையினரை நம்ப வேண்டாம் - நடிகை தனுஸ்ரீ தத்தா

சுஷாந்த் மறைவு குறித்து நடிகை தனுஸ்ரீ தத்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மும்பை காவல்துறையினரை நம்ப வேண்டாம் என்று கூறியுள்ளார்.

mumbai-police-cant-be-trusted-tanushree-dutta-on-sushant-singh-rajputs-death-case
mumbai-police-cant-be-trusted-tanushree-dutta-on-sushant-singh-rajputs-death-case

By

Published : Aug 2, 2020, 7:20 PM IST

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் மாதம் இறுதியில் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டார். பாலிவுட்டில் நடைபெற்ற வாரிசு அரசியல் காரணமாகத்தான் தற்கொலை செய்து கொண்டார் என்று கூறப்படுகிறது. அவரின் மறைவு குறித்து சிபிஐ விசாரணை செய்ய வேண்டுமென்று திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

அந்த வகையில் சுஷாந்த் மறைவு குறித்து நடிகை தனுஸ்ரீ தத்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "மும்பை காவல்துறையினரை நம்ப வேண்டாம். அவர்கள் ஒரு வழக்கின் இறுதி தீர்வை காண்பதற்கு முன்பே அவ்வழக்கை எவ்வாறு முடிப்பது என்பதையே நோக்கமாக வைத்திருப்பார்கள்.

நான் பாலிவுட்டில் சந்தித்த சில பிரச்னையின் போது, காவல்துறையினரிடம் புகார் கொடுத்தேன். அதற்கு தேவையான அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பித்தேன். இருப்பினும் மும்பை காவல்துறையினர் எனது வழக்கை விசாரணை செய்யாமல், காலம் தாழ்த்தி வந்தனர். அதனால் அதை விடுத்துவிட்டு எனது பணியை செய்ய தொடங்கிவிட்டேன்" என்று கூறியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details