தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

நடிகர் பிரகாஷ்ராஜுக்கு எதிராக மறியல் போராட்டம்: ஜாக்குவார் தங்கம் ஆவேசம் - எச்சரிக்கை

சென்னை: நடிகர் பிரகாஷ் ராஜூக்கு எதிராக தயாரிப்பாளர் சங்கத்தில் பண மோசடி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Prakashraj

By

Published : Sep 8, 2019, 4:53 PM IST

சென்னை சாலிகிராமத்தில் 'புளூவேல்' படத்தினுடைய ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஜாக்குவார் தங்கம் கலந்துக்கொண்டார்.

அப்போது அவர் பேசுகையில், ”நடிகர் சத்யராஜ் நடிக்கும் ஒரு படத்தில் வில்லனாக நடிக்க பிரகாஷ் ராஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதற்காக பிரகாஷ்ராஜுக்கு முன்பணமாக ரூ 15 லட்சம் வழங்கப்பட்டது. ஆனால் அவரால் அப்படத்தில் நடிக்க முடியவில்லை. அப்போது வழங்கப்பட்ட முன் பணத்தில் ரூ 5 லட்சத்தை திருப்பி கொடுத்துவிட்டார். ஆனால் இன்றுவரை மீதி பணமான ரூ 10 லட்சத்தை அவர் திருப்பி தராமல் ஏமாற்றிவருகிறார்.

ஜாகுவார் தங்கம் ஆவேசம்

எனவே இது தொடர்பாக பிரகாஷ்ராஜ் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ரூ 10 லட்சத்தை பிரகாஷ் ராஜ் திருப்பி வழங்காவிட்டால் தமிழ்நாட்டின் எந்தப் பகுதியிலும் பிரகாஷ்ராஜ் படப்படிப்பில் ஈடுபட முடியாதவாறு அவருக்கு எதிராக மறியலில் ஈடுபடுவோம்” என்றார்.

ABOUT THE AUTHOR

...view details