நடிகர் மோகன்லால் தனது பெற்றோர்களின் நினைவாக விஷ்வ சாந்தி என்ற அறக்கட்டளையை நடத்தி வருகிறார். இந்த அறக்கட்டளையின் மூலமாக கேரளா மட்டுமின்றி, தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களிலும் அவர் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்.
இதனிடையே நேற்று தனது 60ஆவது பிறந்தநாளை நடிகர் மோகன்லால் கொண்டாடினார். இதையொட்டி கோவை, ராமநாதபுரம் பகுதியில் அமைந்துள்ள செயின்ட் தாமஸ் முதியோர் இல்லத்தில் வசித்து வரும், சுமார் 60க்கும் மேற்பட்ட முதியோர்களுடன் காணொலி காட்சி மூலம் அவர் உரையாடினார்.
அவர்களிடம் தனது பிறந்தநாளுக்கு ஆசி பெற்றதோடு, காணொலி மூலம் கேக் வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடினார்.