சென்னை எழும்பூரில் வசிப்பவர் ஜோ மைக்கேல் பிரவீன். இவர் மிஸ் தமிழ்நாடு அழகி போட்டிகளை நடத்தும் தனியார் நிகழ்ச்சி ஏற்பாடு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இவர் கடந்த மே மாதம் 28ஆம் தேதி நடிகை மீரா மிதுன் தனது நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி பல மாடல்கள், ஆடை வடிவமைப்பாளர்களிடம் லட்சக் கணக்கான ரூபாய் பணத்தை ஏமாற்றியதாகவும், தனது நிறுவனத்தின் பெயரை கெடுத்து வருவதாகவும் கூறி புகார் அளித்திருந்தார்.
‘அவனைத் தூக்கு..!’ பிக்பாஸ் நடிகையின் சர்ச்சை ஆடியோ!
சென்னை: பிக்பாஸ் மூலம் பிரபலமான மீரா மிதுன் தன்னை கொலை செய்ய திட்டம் தீட்டி வருவதாக ஜோ மைக்கேல் பிரவீன் என்பவர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருப்பது கோலிவுட் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பான விசாரணை நடைபெற்று வந்த நிலையில் இன்று காவல் ஆணையர் அலுவலகம் வந்த ஜோ மைக்கேல் பிரவீன், மீரா மிதுன் தன்னை கொலை செய்ய திட்டம் தீட்டி வருவதாகக் கூறி புகாரளித்தார். மேலும், இது தொடர்பாக மீரா மிதுன் அவரது மேலாளரிடம் பேசிய ஆடியோ ஆதாரத்தையும் அவர் புகாருடன் சமர்ப்பித்தார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜோ மைக்கேல் பிரவீன், ஏற்கனவே மீரா மிதுன் மீது முழு ஆதாரத்துடன் புகார் அளித்தேன். இதனால் மீரா மிதுன் தன்னை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார் என்றும் தெரிவித்தார்.
மேலும், மாடல் அழகி மீரா மிதுன் பேசும் ஆடியோ இணையத்தில் கசிந்து வைரலாகி வருகிறது. இந்த ஆடியோவின் மூலம் சமூகத்தில் தனக்கான நல்ல பிம்பத்தை வைத்திருக்கும் மீரா மிதுனின் உண்மை முகத்தை தெரிந்துகொண்ட நெட்டிசன்கள் அவரை மிகக் கடுமையான சொற்களால் வசைபாடி வருகின்றனர்.