சந்தானம் நடிப்பில் வெளியான 'தில்லுக்கு துட்டு', 'தில்லுக்கு துட்டு 2' ஆகிய ஹாரர் காமெடி படங்களை இயக்கியவர் ராம்பாலா. இந்த இரண்டு படங்களுமே ரசிகர்கள் மத்தியில் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதனை அடுத்து ராம்பாலா தற்போது மிர்ச்சி சிவா, நிக்கி கல்ராணி ஆகியோர் நடிப்பில் 'இடியட்' என்னும் ஹாரர் காமெடி வகையிலான படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தை ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரித்துள்ளது, விக்ரம் செல்வா இசையமைத்துள்ளார்.