தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

மெட்டி ஒலி தொடர் நடிகை காலமானார்! - மெட்டி ஒலி தொடர் நடிகை காலமானார்

மெட்டி ஒலி தொடர் மூலம் புகழ்பெற்ற நடிகை உமா மகேஷ்வரி உடல்நலக்குறைவால் காலமானார்.

நடிகை உமா மகேஷ்வரி
நடிகை உமா மகேஷ்வரி

By

Published : Oct 17, 2021, 11:48 AM IST

சென்னை : திருமுருகன் இயக்கி, நடித்த மெட்டி ஒலி சீரியலில் அவருக்கு மனைவியாக விஜி என்கிற கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை உமா மகேஷ்வரி.

இந்தத் தொடரின் வெற்றிக்குப் பிறகு 'வெற்றிக் கொடி கட்டு', 'உன்னை நினைத்து', 'அல்லி அர்ஜுனா' உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

மேலும், 'ஒரு கதையின் கதை', 'மஞ்சள் மகிமை' உள்ளிட்ட தொடர்களிலும் உமா மகேஷ்வரி நடித்துள்ளார். ‘ஈ பார்கவி நிலையம்’ என்கிற மலையாளப் படத்தின காதாநாயகியாகவும் நடித்திருக்கிறார்.

நடிகை உமா மகேஷ்வரி

கால்நடை மருத்துவரை திருமணம் செய்த பிறகு உமா மகேஸ்வரியை சீரியல்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார். அவர் சென்னை காட்டுப்பாக்கம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் உமா மகேஸ்வரி உடல்நலக் குறைவால் இன்று சென்னையில் காலமானார். உமாவின் மறைவு சின்னத்திரை நடிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலரும் அவருடைய மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

நடிகை உமா மகேஷ்வரி

இதையும் படிங்க : அவர எப்படி 'தல'ன்னு சொல்லலாம் - சமூகவலைதளத்தில் சண்டையிடும் 'தல' வெறியர்கள்!

ABOUT THE AUTHOR

...view details