'மெரினா புரட்சி' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த விழாவில் நல்லகண்ணு, திருமாவளவன், மனுஷ்யபுத்திரன், இயக்குநர் பொன்வண்ணன் உள்ளிட்ட பல்வேறு திரை பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் கலந்து கொண்டனர். அப்போது திருமாவளவன் பேசுகையில், ‘மெரினா போராட்டம் நடைபெற்றபோது யார் யாரோ உணவு கொண்டு வந்து கொடுத்தார்கள். அது கார்ப்பரேட் கம்பெனிகளாக கூட இருக்கலாம். ஒவ்வொரு உணவுப் பாக்கெட்டிலும் ஒரு காண்டம் இருந்தது. இது என்ன காரணத்திற்காக வைக்கப்பட்டது என்று ஆய்வு செய்ய வேண்டும்.
'மெரினா புரட்சியின்போது உணவு பாக்கெட்டில் காண்டம்’ - ஆய்வுக்கு வலியுறுத்தும் திருமா! - தொல் திருமாவளவன் பேச்சு
சென்னை: மெரினா போராட்டத்தின்போது, சில உணவு பொட்டலங்களில் காண்டம் பாக்கெட்டுகள் இருந்ததாகவும், அது தொடர்பாக ஆய்வு செய்ய வேண்டும் எனவும் தொல். திருமாவளவன் எம்.பி தெரிவித்துள்ளார்.
எந்த புரட்சியும் அமைப்பு சார்ந்து நிகழ்கின்ற போது தான் வெற்றி பெறுகிறது. மெரினா போராட்டம் நல்ல தொடக்கம், ஆனால் வேதனையான முடிவு. நம்முடைய கலாசாரத்தைக் காப்பாற்றுவதற்கான ஒரு போராட்டம் மெரினா போராட்டம். இது தமிழர் பண்பாடு என்பது காளை மாடு என்கிற ஒற்றை அடையாளத்துடன் இல்லை அதைத்தாண்டி இருக்கிறது.
தமிழ்நாட்டில் வட பகுதியைச் சேர்ந்தவர்கள் மிக எளிதாக ஊடுருவி பரவி வருகிறார்கள். சாதி, மதவெறியர்களும் வெவ்வேறு வடிவங்களில் நம்முடைய உணர்வுகளுக்கு ஏற்ப அரவணைத்து ஊடுருவ பார்க்கிறார்கள். அகோரிகள், நிர்வாண சாமியார்கள் கூட தமிழ்நாட்டிற்கு வருவார்கள். நாம் வீதிகளில் நின்று வேடிக்கை பார்க்கவோ அல்லது அவர்களை வணங்கும் வாய்ப்பிருக்கிறது என்று அவர் தெரிவித்தார்.