2007ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் பிரபு தேவா இயக்கத்தில் வெளியான படம் போக்கிரி. இப்படம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தது. இதில் இடம்பெற்ற அனைத்து பாடலும் இப்போதும் நமது செல்போன் பிளே லிஸ்ட்டில் இருக்கும்.
'போக்கிரி மல்கோவா மாம்பழம்' எங்க வர போய்யிருக்குன்னு தெரியுமா...! - பிகில்
விஜய் நடிப்பில் வெளியான 'போக்கிரி' படத்தின் பாடல் ஒன்று தற்போது இணையத்தை கலக்கி வருகிறது.
இந்நிலையில் இப்படத்தின் ஒரு பாடலான 'மாம்பழமா மாம்பழம் மல்கோவா மாம்பழம்' பாடல் ஈரானில் இருக்கும் ஜிம்மை கலக்கி உள்ளது. ஈரான் ஜிம் ஒன்றில் இப்பாடல் ஒலிக்க செய்து அங்கிருப்பவர்கள் ஒன்றாக இப்பாடலுக்கு நாடனமாடுகின்றனர். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தை கலக்கி வருகிறது. இதைப்பார்த்த அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இந்த வீடியோவை பார்த்த மகேந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த மகேந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில், இது போன்று நானும் எனது காலை பொழுதில் தமிழ் பாட்டிற்கு ஆடி எனது புதிய நாளை தொடங்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.