தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

வாத்தி ரெய்டு... மாஸ்டர் ரிலீஸ் தேதி அறிவிப்பு; கொண்டாட்டத்தில் தளபதி ரசிகர்கள்! - விஜய் சேதுபதி

‘கைதி’ புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் அடுத்தாண்டு ஜனவரி மாதம் 13ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என படக்குழு அறிவித்துள்ளது.

master-movie-official-release-date
master-movie-official-release-date

By

Published : Dec 29, 2020, 2:05 PM IST

நடிகர் விஜய்யின் 64ஆவது படம் ‘மாஸ்டர்’. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்தை, கடந்த ஏப்ரல் மாதமே ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர். ஆனால் கரோனா அச்சுறுத்தல் காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டதால், மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டது.

இதற்கிடையில் சூர்யாவின் ‘சூரரைப்போற்று’ போன்று பல திரைப்படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாகி வசூல் சாதனையை குவித்தன. அதனால் மாஸ்டர் படமும் தீபாவளியன்று ஓடிடி தளத்தில் வெளியிட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. இருப்பினும் படத்தை தியேட்டரில் மட்டும்தான் வெளியிடுவோம் என நடிகர் விஜய்யும், படக்குழுவும் திட்டவட்டமாக கூறியது.

இதனையடுத்து இன்று மாஸ்டர் திரைப்படம் வெளியாகும் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்தனர். அதன்படி வருகிற ஜனவரி 13ஆம் தேதி மாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில் திரையிடப்படும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஏற்கனவே தீபாவளி அன்று படத்தின் டீசரை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்திய படக்குழு, தற்போது படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதியை அறிவித்து ரசிகர்களை உற்சாகத்தின் எல்லைக்கே கொண்டுசென்றுள்ளது.

மாஸ்டர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு குறித்து செய்திகள் தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகிவருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:விஜய்யின் 'மாஸ்டர்' கதை இதுதான்? கசிந்த தகவல்

ABOUT THE AUTHOR

...view details