தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'என் நெஞ்சில் குடியிருக்கும் நண்பா, நண்பிகள்'- மாஸ்டரின் புதிய புரோமோ! - master vijay

மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த புதிய புரோமோவை படக்குழு வெளியிட்டுள்ளது

மாஸ்டர் புதிய புரோமோ வெளியீடு
மாஸ்டர் புதிய புரோமோ வெளியீடு

By

Published : Mar 8, 2020, 9:26 PM IST

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இதில் மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, விஜய் சேதுபதி, சஞ்சீவ், சாந்தனு உள்ளிட்ட ஏராளமானோர் நடித்துள்ளனர். மாஸ்டர் படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்த நிலையில், போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில் விஜய் ரசிகர்களால் மிகுவும் எதிர்பார்க்கப்பட்ட மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 15ஆம் தேதி சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர விடுதியில் நடைபெறவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இசை வெளியீட்டு விழாவிற்கு இன்னும் ஒரு வாரம் இருக்கும் நிலையில், தற்போதே விஜய் ரசிகர்கள் அதை ட்விட்டரில் கொண்ட ஆரம்பித்துவிட்டனர்.

இந்நிலையில் விஜய் படத்தின் இசை வெளியீட்டு விழா என்றாலே அவர் என்ன பேசப்போகிறார், எப்படி பேசப்போகிறார் என்று ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவும். தற்போது அதை அதிகரிக்கும் வகையில் மாஸ்டர் படக்குழு புரோமோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், விஜய்யின் மெர்சல் படத்தில் வரும் பின்னணி இசை ஒலிக்க, விஜய் 'என் நெஞ்சில் குடியிருக்கும் நண்பா, நண்பிகள்' என்று பேசும் வசனம் இடம்பெற்றுள்ளது. இந்த புரோமோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க:விஜய்யின் மாஸ்டர் இசை வெளியீட்டு விழா தேதி அறிவிப்பு!

ABOUT THE AUTHOR

...view details