கோலிவுட் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட விஜய்யின் ’மாஸ்டர்’ திரைப்படம் வரும், பொங்கல் விடுமுறையையொட்டி வரும் 13ஆம் தேதி வெளியாகிறது.இத்திரைப்படம் வெளியாக இன்னும் மூன்று நாள்கள் மட்டுமே உள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் ஏற்கனவே முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் விடுமுறை நாளான இன்று(ஜன.10) சென்னை ரோகிணி திரையரங்கில், முன்பதிவு தொடங்கியது. இதையொட்டி விஜய் ரசிகர்கள் டிக்கெட் வாங்கத் திரையரங்குகளில் முந்தியடித்து செல்கின்றனர்.