தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

மாரி செல்வராஜ் - உதயநிதி ஸ்டாலின் படத்திற்கு இசையமைக்கும் ஏ.ஆர். ரஹ்மான்...? - மாரி செல்வராஜ் - உதயநிதி ஸ்டாலின் படம்

சென்னை: மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படத்திற்கு ஏஆர்.ரஹ்மான் இசையமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடந்துவருகிறது.

mari
mari

By

Published : Sep 29, 2021, 1:27 PM IST

மாரி செல்வராஜ் 'கர்ணன்' படத்திற்கு பின் விக்ரம் மகன் துருவை கதாநாயகனாக வைத்து புதிய படத்தை இயக்குகிறார். கபடி விளையாட்டை பற்றிய படமாக இது உருவாகிறது. துருவ் விக்ரம் இதற்கான பயிற்சிகள் மேற்கொண்டு வருகிறார்.

இதனையடுத்து மாரி செல்வராஜ் உதயநிதி ஸ்டாலினுக்கு ஒரு கதையை தயாராக வைத்துள்ளார். இதில் உதயநிதியுடன் பகத் ஃபாசிலும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் கடைசி படம் இது என்றும் கூறப்படுகிறது. இதனை அடுத்து அவர் முழுநேர அரசியல் பயணத்தை தொடர உள்ளார் என்றும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: மாரிசெல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் - வெளியான வைரல் புகைப்படம்!

ABOUT THE AUTHOR

...view details