சென்னை: இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் பா.ரஞ்சித் தனது நீலம் புரொடக்சன்ஸ் மூலம் தரமான படங்களை தயாரித்து வருகிறார். அந்த வகையில் அவரது தயாரிப்பில் வெளியான ‘பரியேறும் பெருமாள்’, ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ ஆகிய திரைப்படங்கள் விமர்சனம் மற்றும் வணிக ரீதியாக மிகப்பெரிய வெற்றியடைந்தன.
இந்த வெற்றியைத் தொடர்ந்து கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ் மற்றும் லிட்டில் ரெட் கார் பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து ரஞ்சித் புதிதாக படங்களை தயாரிக்கிறார்.
இந்தக் கூட்டணியின் தயாரிப்பில் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கும் படத்தில் துருவ் விக்ரம் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. கபடி வீரராக துருவ் விக்ரம் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.
களமிறங்கப்போகிறது மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் காம்போ! - பா.ரஞ்சித்
கபடி வீரராக துருவ் விக்ரம் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.
மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம்
இதையும் படிங்க:கார்த்தியின் சர்தார் படப்பிடிப்பு எப்போது?