சென்னை:மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கர்ணன்'. இதில், ரெஜிஷா விஜயன், யோகிபாபு, லால் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கலைப்புலி தாணு தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
மீண்டும் கைகோர்க்கும் 'கர்ணன்' கூட்டணி! - கர்ணன் விமர்சனம்
'கர்ணன்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மாரிசெல்வராஜ் - தனுஷ் மீண்டும் ஒரு படத்தில் இணையவுள்ளனர்.
ஏப்ரல் 9ஆம் தேதி தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியான இப்படம், வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரும் வெற்றி பெற்றது. இப்படத்தைப் பார்த்த திரைப் பிரபலங்கள், ரசிகர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் படத்தை வெகுவாக பாராட்டினர்.
இந்நிலையில், தனுஷ் - மாரிசெல்வராஜ் மீண்டும் புதிய படத்தில் இணையவுள்ளனர். இதுகுறித்து தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், "கர்ணனின் பிளாக்பஸ்டர் வெற்றிக்குப் பிறகு, மாரி செல்வராஜும் நானும் மீண்டும் ஒரு முறை கைகோர்க்கிறோம் என்று அறிவிப்பதில் மகிழ்ச்சி. முன் தயாரிப்பு நடக்கிறது. அடுத்த ஆண்டு படப்பிடிப்பு தொடங்கும்" என பதிவிட்டுள்ளார்.