தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ஆட்டோ டிரைவருக்கு மனைவியாகும் 'அசுரன்' நடிகை - மலையாள நடிகை மஞ்சு வாரியர்

பிரபல காமெடி, குணச்சித்திர நடிகர் சுராஜ் வெஞ்ஞாரமூடு நடிக்கும் புதிய படத்தில் நடிகை மஞ்சு வாரியர் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார்.

manju-warrier
manju-warrier

By

Published : Jan 27, 2020, 1:35 PM IST

பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர் 'அசுரன்' படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்துள்ளார். சமீபத்தில் இவர் நடிப்பில் 'பிரதி பூவண்கோழி' என்ற படம் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது.

நல்ல கதையம்சம் கொண்ட படங்களைத் தேர்வு செய்து நடித்துவரும் மஞ்சுவாரியர் தற்போது தேசிய விருது பெற்ற பிரபல மலையாள காமெடி, குணச்சித்திர நடிகருமான சுராஜ் வெஞ்ஞாரமூடு நடிக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

பிரபல எழுத்தாளர் எம்.முகுந்தனின் 'ஆட்டோ ரிக்ஷாகாரன்டே பார்யா' என்ற நாவலைத் தழுவி எடுக்கப்படும் புதிய படத்தை இயக்குநர் ஹரிகுமார் இயக்குகிறார்.

மஞ்சு வாரியர் - சுராஜ் வெஞ்ஞாரமூடு

சஜீவன் என்ற ஆட்டோ ஓட்டுநராக சுராஜ் வெஞ்ஞாரமூடு இப்படத்தில் நடிக்கிறார். கடனாளியான வேலைக்குச் செல்லாத இளைஞரின் மனைவியாக மஞ்சு வாரியர் நடிக்கிறார். குடும்பச் சுமையால் கணவனின் பணிகளைக் கையில் எடுக்கும் ஒரு சாதனைப் பெண்ணாக இப்படத்தில் மஞ்சு வாரியர் தோன்றி ரசிகர்களுக்கு விருந்து படைக்கவுள்ளார்.

மஞ்சு வாரியர் நடித்துள்ள ஜாக் அன்டு ஜில், மரக்கார் அரபிக் கடலின்டே சிம்ஹம், காயாட்டம் உள்ளிட்ட படங்கள் இந்த ஆண்டு வெளியாகவுள்ளது.

இதையும் படிங்க...கூடைப்பந்து ஜாம்பவானுக்கு பிரியங்கா சோப்ரா இரங்கல்

ABOUT THE AUTHOR

...view details