தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'அசுரன்' மஞ்சுவாரியர் ஹேப்பி அண்ணாச்சி... நாமெல்லாம் ஒன்னா நிக்கனும்னு சொல்றாங்க, ஏன் தெரியுமா...? - சேட்டிலைட் போன்

இமாச்சலப் பிரேதச நிலச்சரிவில் இருந்து படக்குழுவினருடன் மீட்கப்பட்ட நடிகை மஞ்சு வாரியர் மீட்புக் குழுவுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

Manju Warrier

By

Published : Aug 22, 2019, 7:47 PM IST

மலையாள திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் மஞ்சு வாரியர். இவர், தமிழில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் ’அசுரன்’ திரைப்படத்தில் நடித்துவருகிறார்.

மேலும், மஞ்சு வாரியர் மலையாளத்தில் இயக்குநர் சனல் குமார் சசிதரன் இயக்கத்தில் உருவாகிவரும் ’கைட்டம்’ திரைப்படத்திலும் நடித்துவருகிறார். இதற்காக சனல் குமார் சசிதரன், மஞ்சு வாரியர் உள்ளிட்ட படக்குழு இமாச்சலப் பிரேதசத்தில் தங்கி படப்பிடிப்பு நடத்தி வருகிறது. இந்நிலையில், அங்கு பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் மஞ்சு வாரியர் மற்றும் படக்குழுவினருடன் அங்கு சிக்கி கொண்டார்.

படக்குழுவினருடன் மஞ்சு வாரியார்

இது குறித்து மஞ்சு வாரியர், தனது சகோதரிடம் படக்குழு சிக்கி கொண்டதை சேட்டிலைட் தொலைபேசி வாயிலாக தெரிவித்தார். இதனையடுத்து அவர் வெளியுறவு இணை அமைச்சரிடம் தகவல் அளித்தார். அவர் இமாச்சலப் பிரதேச முதலமைச்சர் ஜெய்ராம் தாகூருக்கு தகவல் அளித்தார்.

மஞ்சு வாரியார் முகநூல் பதிவு

இதனையடுத்து மீட்பு குழுவினர் துரிதமாக செயல்பட்டு, கைட்டம் படக்குழுவினரை அங்கிருந்து மீட்டனர். இது குறித்து தனது ஃபேஸ்புக்கில் மஞ்சு வாரியர் ஒரு பதிவிட்டார். அதில், 'சணல்குமார் சசிதரன், நான், படக்குழுவினர் மணாலிக்கு பாதுகாப்பாக திரும்பி வந்தோம். ஷியாகோரு, சத்ரு ஆகிய பகுதிகளில் ஆறு நாட்கள் சிக்கி தவித்த பின்னர் இப்போது நாங்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதை உங்கள் அனைவருக்கும் தெரிவிக்க மகிழ்ச்சியாகவும் நிம்மதியாவும் உள்ளது.

கேரளாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை கடந்த வருடம் நாம் எப்படி ஒன்றாக நின்று எதிர்கொண்டோமோ, அதேபோல் இந்த வெள்ள பெருக்கை நாம் எதிர்கொள்ள வேண்டும்' என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்த பதிவுடன் படக்குழுவினர் உடனான புகைப்படத்தையும் அவர் வெளியிட்டார்.

ABOUT THE AUTHOR

...view details