தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ஆசையாக வாங்கிய கார் - நிலைக்காத சந்தோஷம் - தொகுப்பாளினி மணிமேகலை கார் விபத்து

பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினியான மணிமேகலை புதிதாக சொகுசு கார் வாங்கிய நிலையில் விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

manimegalai-released-vid-before-meets-with-an-accident
manimegalai-released-vid-before-meets-with-an-accident

By

Published : Sep 22, 2021, 3:54 PM IST

பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினியான மணிமேகலை. ஹுசைன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். பின் சிறிது காலம் திரையில் தோன்றாமல் இருந்தார். அதன் பின் தனியார் தொலைக்காட்சியில் ரியாலிட்டி ஷோக்களில் கலந்துகொண்டு மீண்டும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளார்.

மணிமேகலை தற்போது பி.எம்.டபிள்யூ சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளார். இதை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

இந்த நிலையில் பி.எம்.டபிள்யூ. கார் வாங்கினாலும் பழைய காரை மறக்கக் கூடாது என்பதற்காக அந்தக் காரில் சமீபத்தில் கணவனும், மனைவியும் ஒரு டிரிப் சென்றனர்.

அப்போது லாரி ஒன்றில் மோதி லேசாக உரசி விபத்து ஏற்பட்டது. இதில் நல்வாய்ப்பாக மணிமேகலை, ஹுசைன் ஆகிய இருவருக்கும் எந்தவிதமான காயமும் இல்லை. கார் சேதமடைந்துள்ளது.

இதையும் படிங்க : விபத்தில் சிக்கிய மணிமேகலை-ஹுசைன்

ABOUT THE AUTHOR

...view details