உலகளவில் திரைத்துறையின் உயரிய விருதாக பார்க்கப்படுவது ஆஸ்கர் விருது. இந்த விருது விழா ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் நடைபெறுவது வழக்கம். கடந்த ஆண்டு கரோனா பரவல் காரணமாக விழா ஏப்ரல் மாதம் நடைபெற்றது.
இதனையடுத்து ஆஸ்கர் 2022ஆம் ஆண்டுக்கான விழா அமெரிக்காவில் மார்ச் மாதம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் இந்தியா சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த படங்களை தேர்வு செய்து அனுப்புவது வழக்கம்.
அந்தவகையில் இந்த ஆண்டு ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பில் பல்வேறு மொழிகளின், 14 படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அந்த பட்டியலில் தேர்வான ஒரே தமிழ் படம், ’மண்டேலா’. யோகி பாபு நடித்த இப்படத்தை மடோன் அஸ்வின் இயக்கியுள்ளார்.