சிலம்பரசன் நடித்துள்ள ஈஸ்வரன் படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் இன்று (ஜனவரி 14) வெளியாகியுள்ளது. அதைத் தொடர்ந்து, வெங்கட் பிரபு இயக்கத்தில் "மாநாடு" என்ற படத்தில் சிலம்பரசன் நடித்து வருகிறார்.
'மாநாடு' படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு! - ஈஸ்வரன் படம்
சிலம்பரசன் நடிப்பில் உருவாகி வரும் "மாநாடு" படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
maanadu_poster
சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இந்த படம், பல்வேறு பிரச்னைகளை கடந்து தற்போது படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த படத்தின் முதல் பார்வை மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகி உள்ளது.
யுவன் சங்கர் ராஜாவின் சரவெடி இசையில் மிக சிறப்பாக மோஷன் போஸ்டர் இருப்பதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.