இயக்குநர் சீனு ராமசாமி இயக்கிய ‘தென்மேற்குப் பருவக்காற்று’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் விஜய் சேதுபதி. தொடர்ந்து சீனு ராமசாமி இயக்கத்தில் ‘இடம் பொருள் ஏவல்’, ‘தர்மதுரை’ ஆகிய படங்களில் நடித்தார். இதில், ‘இடம் பொருள் ஏவல்’ இன்னும் ரிலீசாகவில்லை.
'மாமனிதன்' மக்கள் செல்வனுக்காக 'இசைஞானி' பாடிய பாடல் விரைவில் வெளியீடு!
சென்னை: விஜய் சேதுபதியின் மாமனிதன் படத்தில் இளையராஜா பாடிய பாடல் விரைவில் வெளியிடப்படும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
தற்போது நான்காவது முறையாக சீனுராமசாமியுடன் 'மாமனிதன்' படத்தில் விஜய்சேதுபதி இணைந்துள்ளார். இப்படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடிகை காயத்ரி சங்கர் நடித்துள்ளார். இப்படத்தை யுவன் ஷங்கர் ராஜா தயாரிக்கிறார். இவரும், இளையராஜாவும் இணைந்து இசையமைத்துள்ளனர்.
இந்த படத்தில் யுவனின் இசையில் இளையராஜா பாடியுள்ள ஒரு பாடல் விரைவில் வெளியாகும் என்று இயக்குநர் சீனு ராமசாமி ட்விட்டரில் தெரிவித்துள்ளார். படத்தின் ரிலீஸ் தேதியும் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.