தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நினைவில் வாடும் மோகன்லால் - வைரல் புகைப்படம்

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் பழம்பெரும் நடிகர் சிவாஜி கணேசனின் 18வது நினைவுதனத்தை நினைவுக் கூர்ந்து ரசிகர்களை உறைய வைத்துள்ளார்.

mohan lal

By

Published : Jul 23, 2019, 11:10 AM IST

மலையாள சினிமாவின் வசூல் மன்னனாக இருப்பவர் மோகன் லால். நடிகர் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன் லால் நடிப்பில் வெளியான 'லூசிஃபர்' திரைப்படம் 100 கோடி வசூல் செய்து சாதனை புரிந்தது. மலையாள சினிமாவில் இப்படம் செய்த சாதனை அனைவரையும் பிரமிக்க வைத்தது. தனக்கென்று ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் மோகன்லால் ஏற்று நடிக்காத வேடங்களே இல்லை. தற்போது பிரபல இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கும் 'மரைக்காயர் அரபிக்கடலிண்டே சிம்கம்' என்ற வரலாற்று படத்தில் நடித்து வருகிறார்.

தமிழில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ’காப்பான்’ படத்தில் பிரதமராக நடித்திருப்பதாகக் கூறப்படுகிறது. ‘காப்பான்’ இசை வெளியீட்டு விழாவில் ரஜினி இவருக்கு கொடுத்த கிப்ட் அரங்கத்தையே அதிரவைத்தது. இந்நிலையில் பழசை மாறக்காத மோகன் லால், பழம்பெரும் நடிகர் சிவாஜி கணேசனின் 18வது நினைவு தினத்தை அவரது புகைப்படத்துடன் பதிவிட்டு பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார்.

1997ஆம் ஆண்டு வெளிவந்த 'ஒரு யாத்ரமொழி' படத்தில் சிவாஜி கணேசனுடன் மோகன் லால் நடித்திருந்தார். இப்படத்தில் மோகன்லால் சிவாஜியின் மகனாக நடித்திருந்தார். இப்படத்தில் அவருடன் நடித்த தனது அனுபவத்தையும், அவரைப் பற்றி புகழ்ந்தும் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது இந்தப் புகைப்படம் வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்தப் புகைப்படம் வைரலானதையடுத்து மோகன் லாலின் ரசிகர்கள் மீண்டும் 'ஒரு யாத்ரமொழி' படத்தை இணையத்தில் தேடி பார்த்து ரசித்து வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details