மலையாள நடிகை மாளவிகா மோகனன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'பேட்ட' படம் மூலம் தமிழில் அறிமுகமானார். சசிகுமாரின் மனைவியாகப் பூங்கொடி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இதனையடுத்து இரண்டாவது படமே அவர் 'மாஸ்டர்' படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். நடித்த இரண்டு படங்களுமே டாப் ஹீரோக்களின் படம் என்பதால், இவர் பெரிய ஹீரோ படங்களில் மட்டுமே கவனம் செலுத்துவார் எனத் தகவல் உலவியது. இவர் தற்போது தனுஷுடன் இணைந்து, 'மாறா' படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இதேபோல் பாலிவுட்டில் உட்யவார் இயக்கிவரும் 'யுத்ரா' படத்தில் நாயகியாக நடித்துவருகிறார். முழுக்க முழுக்க ஆக்ஷன் படமாக உருவாகிவரும் இதில் மாளவிகா பல ஆக்ஷன் காட்சிகளில் நடித்துவருகிறார் எனக் கூறப்படுகிறது.