நடிகர் அசோக் செல்வன், ரித்திகா சிங் மற்றும் வாணி போஜன் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் 'ஓ மை கடவுளே'.
'ஓ மை கடவுளே' படத்தை பாராட்டிய மகேஷ்பாபு! - Latest cinema news
நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் வெளியான 'ஓ மை கடவுளே' படத்தை தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு பாராட்டியுள்ளார்.
Oh my kaduvule
இத்திரைப்படம் வெளியாகி இத்தனை மாதங்கள் கழித்து தெலுங்கு பட நடிகர் மகேஷ்பாபு, 'ஓ மை கடவுளே' படத்தைப் பாராட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "ஓ மை கடவுளே படத்தை நான் மிகவும் ரசித்து பார்த்தேன்" என்றார். அதுமட்டுமின்றி நடிகர் அசோக் செல்வன் மற்றும் இயக்குநர் அஸ்வந்தையும் பாராட்டியுள்ளார். இந்த பதிவைக் கண்ட அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன் ஆகியோர் நன்றி தெரிவித்து பதிவு வெளியிட்டுள்ளனர்.