தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

தமிழில் வெளியாகும் மகேஷ் பாபுவின் ஹிட் திரைப்படம்! - Sarileru Neekevvaru movie

’சரிலேரு நீகேவரு’ திரைப்படம் தமிழில் டப் செய்யப்பட்டுள்ள நிலையில், விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

மகேஷ் பாபு
மகேஷ் பாபு

By

Published : Oct 14, 2020, 7:52 PM IST

தெலுங்கில் மகேஷ் பாபு நடிப்பில் இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியான திரைப்படம் ’சரிலேரு நீகேவரு’ (Sarileru Neekevvaru). அனில் ரவிபுடி இயக்கத்தில் வெளியான இதில் ராஷ்மிகா, விஜயசாந்தி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இப்படம் தற்போது தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாகவுள்ளது. ’இவனுக்கு சரியான ஆள் இல்லை’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்தின் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

’இவனுக்கு சரியான ஆள் இல்லை’

மேலும் விரைவில் இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு மகேஷ் பாபு ரசிகர்களிடையே மிகவும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கை தொடர்ந்து தமிழிலும் இத்திரைப்படம் ஹிட் அடிக்குமா என்பதை பொருத்திருந்து காண்போம்.

இதையும் படிங்க:மால்தீவ்ஸில் நண்பருடன் விடுமுறையை கழிக்கும் டாப்ஸி!

ABOUT THE AUTHOR

...view details