தென்னிந்தியாவுக்கான தாதாசாகேப் பால்கே விருது சில தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. இதில் நடிகர் மகேஷ் பாபு, நடிகை அனுஷ்கா, கன்னட நடிகர் யாஷ் உள்ளிட்டவர்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டன.
இதனையடுத்து தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை இந்த விருதுகளை வழங்கினார். இதில் மகேஷ் பாபுவுக்கான விருதை அவரது மனைவியும் நடிகையுமான நம்ரதா ஷ்ரோத்கர் பெற்றுக்கொண்டார்.
மகேஷ்பாபுக்கான விருதை பெற்றுக்கொண்ட நம்ரதா ஷ்ரோத்கர் இது குறித்து அவர் கூறுகையில், மகேஷ் பாபு தற்போது புதிய படத்தின் படப்பிடிப்பில் இருப்பதால் இந்த விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்ளமுடியாமல்போனதாகத் தெரிவித்தார்.
மகேஷ் பாபுவுக்கு இந்த விருது வழங்கக் காரணம் கடந்த ஆண்டு 'பரத் அனு நேனு' என்ற படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக வழங்கப்பட்டது. தெலுங்கில் வெளியான இப்படம் தமிழில் 'பரத் என்னும் நான்' என்ற பெயரில் டப் செய்து வெளியிடப்பட்டது.