இயக்குநர் ஜமீல் இயக்கத்தில் ஹன்சிகா முன்னணி கதாபாத்திரம் ஏற்று நடித்துவரும் படம் ‘மஹா’. கதாநாயகியை மையப்படுத்தி உருவாகிவரும் இத்திரைப்படம், ஹன்சிகாவின் 50ஆவது படமாகும் .எக்ஸெக்ட்ரா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் ஸ்ரீகாந்த், தம்பி ராமையா, நாசர், கருணாகரன், ஜெயப்பிரகாஷ், சாயா சிங் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இவர்களுடன் படத்தில் 30 நிமிடங்கள் வரும் கெஸ்ட் ரோலில் சிம்பு நடிக்கிறார். அதற்கான காட்சிகள் தற்போது விறுவிறுப்பாக படமாக்கப்பட்டு-வருகிறது.
வைரலாகும் ‘மஹா’ வீடியோ! - சிம்பு
சிம்பு, ஹன்சிகா பங்கேற்ற ‘மஹா’ படப்பிடிப்புக் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
Maha
இந்நிலையில், சிம்பு - ஹன்சிகா இருவரும் ஜீப்பில் பயணம் செய்வது போன்ற படப்பிடிப்புக் காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.சிம்பு, ஹன்சிகா இருவரும் கடைசியாக ‘வாலு’ படத்தில் இணைந்து நடித்தது குறிப்பிடத்தக்கது.