தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

சிம்பு படத்தை விளம்பரம் செய்யும் சிவகார்த்திகேயன் - maha movie teaser

ஹன்சிகா, சிம்பு நடித்துள்ள 'மஹா' படத்தின் டீஸரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன்

By

Published : Jul 1, 2021, 10:24 PM IST

நடிகை ஹன்சிகா நடிப்பில் உபைத் ரஹ்மான் ஜமீல் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம், 'மஹா'. சிம்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இதில் கருணாகரன், சனம் ஷெட்டி, சிம்புவின் நண்பர் மஹத், தம்பி ராமய்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பே வெளியாகவிருந்த இப்படம் தயாரிப்பாளரின் பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட சில காரணங்களால் தள்ளிப் போகிறது.

இப்படத்தின் டீஸர் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் எனப் படக்குழு அறிவித்திருந்தது. ஆனால், டீஸரை யார் வெளியிடப் போகிறார்கள் என்பது குறித்த தகவலை ரகசியம் காத்து வந்தது.

இந்நிலையில் தற்போது, 'மஹா' படத்தின் டீஸரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட உள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது. விரைவில் படத்தின் டிரெய்லர், ரிலீஸ் தேதி உள்ளிட்டவற்றை படக்குழு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க:நேரடியாக ஓடிடிக்கு சென்ற ஃபஹத் ஃபாசில் திரைப்படம்

ABOUT THE AUTHOR

...view details