தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

சாந்தகுமாரின் எட்டு ஆண்டு கால தவம் 'மகாமுனி' - மஹிமா

'மகாமுனி' ஒரு டீம் ஒர்க் இங்கு அனைத்து தொழில் நுட்ப கலைஞருக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டிருப்பதாக நடிகர் ஆர்யா தெரிவித்துள்ளார்.

Magamuni

By

Published : Aug 31, 2019, 10:17 PM IST

ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் இயக்குநர் சாந்தகுமார் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு இயக்கியுள்ள படம் மகாமுனி. இப்படத்தில் நடிகர் ஆர்யா, நடிகைகள் மஹிமா, இந்துஜா நடித்துள்ளனர்.

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னை பிரசாத் லேப்பில் நடைப்பெற்றது. இதில் நடிகர் ஆர்யா, நடிகைகள் மஹிமா நம்பியார் மற்றும் இந்துஜா பாடலாசிரியர் முத்துலிங்கம், இசையமைப்பாளர் தமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மகாமுனி பத்திரிகையாளர் சந்திப்பு!

அப்போது சாந்தகுமார் பேசுகையில், 'இந்தப் படம் எடுக்க மிக நீண்ட காலம் எடுத்துக் கொண்டேன். இதற்குக் காரணம் திரைப்பட வாழ்க்கையும் பர்சனல் வாழ்க்கையும் ஒன்றோடு ஒன்று கலந்து விட்டதுதான்.

எனக்கு இவ்வளவு காலம் தந்த ஞானவேல்ராஜாவுக்கு நன்றி. அவர் எப்பொழுது எனக்கு தொலைபேசி செய்து படத்தின் கதை குறித்து கேட்டாலும், நான் இன்னும் 6 மாதம் அவகாசம் வேண்டும். ஒரு வருடம் வேண்டும் என்று கேட்பேன். அவர் எதுவுமே சொல்ல மாட்டார்.

அப்பொழுதெல்லாம் எனக்கு மிகவும் குற்ற உணர்ச்சியாக இருக்கும். ஆனால், இப்போது படத்தில் அனைத்து வேலைகளும் முடித்து பார்க்கும்போது எட்டு ஆண்டிற்கான பலன் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது' என்றார்.

தொடர்ந்து நடிகர் ஆர்யா பேசுகையில்,’நல்ல கதை. இது போன்ற படத்தில் நடிப்பது மகிழ்ச்சி. இயக்குநர் எப்பவுமே சொல்லுவார் அதிகமாக வசனங்கள் தேவை இல்லை. இந்தப் படத்தில் இசையமைப்பாளராக தமன் உள்ளார். அவருக்கு நாம் வாய்ப்பு அளிக்க வேண்டும். பேக்கிரவுண்ட் மியூசிக் பற்றி யோசிச்சு அதற்கு ஏற்றார்போல் படப்பிடிப்பு நடைபெறும்.

அதே போல் படத்தில் உள்ள ஒவ்வொரு தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் வாய்ப்புகளை கொடுத்து அவர்களுடைய திறமைகளை பயன்படுத்த செய்தார்.

இது ஒரு டீம் ஒர்க் படத்தில் சண்டைக்காட்சிகள் மிகவும் இயல்பாக இருக்கும். ரொம்ப நாட்களுக்குப் பிறகு அனைத்து தரப்பு மக்களுக்கும் சென்றடையக் கூடிய ஒரு படத்தில் நடித்திருக்கிறோம் என்ற திருப்தி எனக்கு உள்ளது’ என்று தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details