தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

தொழிலதிபர்கள் அத்துமீறிய விவகாரம் - அமலாபால் தொடர்ந்த வழக்கின் விசாரணைக்கு இடைக்காலத் தடை! - அமலாபால்

நடிகை அமலாபால் தொழிலதிபர் மீது தொடர்ந்த வழக்கின் விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

அமலாபால் வழக்கு விசாரணைக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை
அமலாபால் வழக்கு விசாரணைக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை

By

Published : Feb 17, 2020, 11:07 PM IST

நடிகை அமலாபால் கடந்த ஆண்டு, சென்னை கொட்டிவாக்கத்தைச் சேர்ந்த தொழிலதிபர் அழகேசன் என்பவர், தன்னிடம் ஆபாசமாக பேசியதாக, மாம்பலம் காவல் நிலயத்தில் புகார் அளித்தார். அப்புகாரின் அடிப்படையில் அவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இச்சம்பவத்தில் தனியார் நிறுவன ஊழியரான பாஸ்கர் என்பவருக்கும் தொடர்பு இருப்பதாக தெரியவந்ததால், அவரையும் காவல்துறை கைது செய்தது. இவர்கள் இருவரும் தற்போது ஜாமீனில் உள்ளனர். இவ்விவகாரம் தொடர்பான வழக்கு சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

"நடிகை அமலாபால் அளித்த பொய் புகாரின் அடிப்படையில் தொடரப்பட்ட இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனவும், வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்" எனக் கோரி குற்றம் சாட்டப்பட்ட பாஸ்கர், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இம்மனு மீதான விசாரணை இன்று நீதிபதி ராஜமாணிக்கம் முன்பு நடைபெற்றது. அப்போது, அமலாபால் அளித்த புகாரின்பேரில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தும், இந்த மனுவுக்கு காவல்துறை பதிலளிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:'நீங்கள் நினைத்தபடி நீதிமன்றம் செயல்பட வேண்டுமா?' - இயக்குநர் முருகதாஸுக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்

ABOUT THE AUTHOR

...view details