உலக நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா, இந்தியாவிலும் வேகமாகப் பரவி வருகிறது. இதைக் கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக மத்திய சுகாதாரத்துறை புது முயற்சியை கையாண்டுள்ளது. ஜியோ, ஏர்டெல்லில் இருந்து ஒருவருக்கு போன் செய்தால் காலர் டியூன் வருவதற்கு பதில் விழிப்புணர்வு குரல் வரும் படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்தக் காலர் டியூன் குறித்து நடிகர் மாதவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், "இப்போதெல்லாம் நான் யாருக்கு போன் செய்தாலும், கேட்கும் முதல் இருமல் சத்தம் என்னை மிரள வைக்கிறது. அது மத்திய சுகாதாரத்துறையின் விழிப்புணர்வு பிரசாரம் என்பது பின்னர் தான் தெரிந்தது. சிறந்த விழிப்புணர்வு. ஆனால் அந்த இருமலை மட்டும் நீக்கிவிடுங்கள். நான் போன் செய்யும் ஒவ்வொரு நபரும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என விரும்புகிறேன்" என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க:தமிழில் ஹீரோ, தெலுங்கில் சக்தி: தூள்கிளப்பும் ட்ரெய்லர்!