'வந்தா ராஜாவாதான் வருவேன்' படத்தைத் தொடர்ந்து, வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ள படம் 'மாநாடு'. இப்படத்தை வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் 'அமைதிப்படை', 'கங்காரு' போன்ற படங்களை தயாரித்த சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார்.
மலேசியாவில் சிம்புவின் 'மாநாடு' - அதிகாரப்பூர்வ தகவல் இதோ!
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகும் 'மாநாடு' படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜூன் 25ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
அரசியல் கதைக்களத்தை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக இயக்குநர் பிரியதர்ஷன் மகள் கல்யாணி நடிக்கவுள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்கிறார்.
இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜூன் 25ஆம் தேதி மலேசியாவில் தொடங்க உள்ளது என்ற அதிகாரப்பூர்வ தகவலை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இப்படத்தை தொடர்ந்து 'முப்தி' என்ற கன்னட பட ரீமேக்கில் கௌதம் கார்த்திக்குடன் இணைந்து சிம்பு நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது