தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'திரைத் துறையை வாழவையுங்கள்!' - சிம்பு படங்கள்

தடுப்பூசி போட்டவர்கள் (Corona Vaccine) மட்டுமே திரையரங்கில் அனுமதிக்க வேண்டும் என்ற உத்தரவு திரைத் துறையை வெகுவாகப் பாதிக்கும் எனத் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

சுரேஷ் காமாட்சி
சுரேஷ் காமாட்சி

By

Published : Nov 23, 2021, 9:20 AM IST

இரண்டு தவணை கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் மட்டுமே திரையரங்குகளில் அனுமதிக்கப்படுவார்கள் எனச் சமீபத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில் சிம்பு நடித்துள்ள மாநாடு (maanadu release date) திரைப்படம் வரும் 25ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இதுபோன்ற அறிவிப்பு வெளியானது படக்குழு மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி (Suresh Kamatchi) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "திரைத் துறை வெகு நாள்களாக நலிந்துவிட்டது. படங்களை வீட்டிலிருந்து பார்க்கும் முறை பிறந்ததிலிருந்து திரையரங்குகள் வெறிச்சோடி தொடங்கிவிட்டது.

அதிர்ச்சி

அதிலிருந்து மீண்டுவர பெரிய படங்கள் உதவுகின்றன. 'அண்ணாத்த' படம் மக்களைத் திரையரங்கிற்கு வரவைத்தது. 50 விழுக்காடு இருக்கை ஆக்கிரமிப்பு என்ற நிலையை மாற்றி 100 விழுக்காடு இருக்கை ஆக்கிரமிப்பைத் தந்தது. திரைத் துறையினருக்கு நெஞ்சில் பால்வார்த்தது.

அனைவரும் தங்களின் அனுமதியைத் தொழில் செய்யும் வெகுமதியாகப் பார்த்தோம் நன்றியோடு. ஆனால் இப்போது தடுப்பூசி செலுத்தினால் மட்டுமே திரையரங்கில் அனுமதி என்பது அத்தனை திரைத் துறையில் இருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுக்க தடுப்பூசி இன்னும் கட்டாயமாக்கப்படவில்லை. 18 வயதிற்குக் கீழ் உள்ளவர்களுக்கு இன்னும் தடுப்பூசி கண்டுபிடிக்கவில்லை. அவர்கள் பள்ளிகளிலும் பொது இடங்களிலும் சென்றுவர அனுமதிக்கப்படுகிறார்கள்.

திரைத் துறையைப் பாதிக்கும்

உங்கள் ஆட்சியில் வேக்சினேஷன் சிறப்பாகவே நடைபெற்றுவருகிறது. நோய்த் தொற்றும் கட்டுக்குள் வந்துள்ளது. முகக்கவசம், சானிடைசர் போன்றவற்றால் தங்களைப் பாதுகாத்துவருகின்றனர் மக்கள்.

தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே திரையரங்கில் அனுமதிக்க வேண்டும் என்ற உத்தரவு திரைத் துறையை வெகுவாகப் பாதிக்கும். ஆண்ட்ராய்டு போன் இல்லாதவர்கள்கூட படத்திற்கு வருவார்கள். அவர்களை சான்றிதழ் எடுத்துவரச் சொன்னால் திரையரங்கம் வருவதை அவர்கள் தவிர்ப்பார்கள்.

திரையரங்குகள் பக்கம் வரமாட்டார்கள்

அதுவும் திரையரங்கம் வந்து திருப்பி அனுப்பினால் அவர்கள் மீண்டும் திரையரங்குகள் பக்கமே வரமாட்டார்கள். தயைகூர்ந்து 18 வயதிற்குக் கீழே உள்ளவர்கள் அனுமதிக்கப்படுவதுபோல விரைவில் தடுப்பூசி போட இருப்பவர்களையும் அனுமதித்து திரைத் துறையை வாழவைக்க வேண்டுகிறோம். விரைந்து முடிவெடுத்து நம் திரையுலகையும், திரையரங்கு உரிமையாளர்களையும் காக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:HBD Chimbu Deven - இம்சை அரசன் சிம்புவுக்கு பிறந்தநாள்

ABOUT THE AUTHOR

...view details