வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்புவிற்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கும் படம் மாநாடு. சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா, எஸ்.ஏ. சந்திரசேகர், கருணாகரன், பிரேம்ஜி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சிம்புவின் இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புள்ளது.
படத்தின் சிங்கிள் பாடல் ரம்ஜான் தினத்தன்று வெளியிடப் படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால், அப்போது வெளியாகவில்லை.