தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

அமெரிக்காவில் வெளியாகும் சிம்புவின் மாநாடு - அமெரிக்காவில் மாநாடு

நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள 'மாநாடு' (Maanaadu) திரைப்படம் அமெரிக்காவில் வெளியாவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மாநாடு
மாநாடு

By

Published : Nov 17, 2021, 3:52 PM IST

நடிகர் சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம், மாநாடு (Maanaadu). சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்றது.

இத்திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 4ஆம் தேதி வெளியாகும் எனப் படக்குழுவினர் அறிவித்திருந்தனர். ஆனால் அதே நாள் ரஜினிகாந்த் நடித்துள்ள ’அண்ணாத்த’ படம் வெளியாவதால் படத்தின் ரிலீஸ் தேதி நவம்பர் 25ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

படத்தின் விறுவிறுப்பான ட்ரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், வெளியீட்டுக்கு முன்பு படக்குழுவினர் விழா (Maanaadu pre release event) ஒன்றை நாளை (நவம்பர் 18) சென்னையில் நடத்தவுள்ளனர்.

இந்நிலையில் 'மாநாடு' திரைப்படம் அமெரிக்காவில் 150 திரையரங்குகளில் வெளியாகிறது. இதனைப் பல வெற்றிப் படங்களை வெளிநாடுகளில் விநியோகித்துள்ள கிரேட் இந்தியா ஃபிலிம்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது. 2021ஆம் ஆண்டில் மட்டும் 15-க்கும் மேற்பட்ட படங்களை கிரேட் இந்தியா ஃபிலிம்ஸ் நிறுவனம் அமெரிக்காவில் வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:Santhanam on Jai Bhim issue: அடுத்தவரைத் தாழ்த்திப் பேசுவது தேவையற்றது - ஜெய் பீம் குறித்து சந்தானம்

ABOUT THE AUTHOR

...view details