தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

Maanaadu : அடி தூள்... வசூலில் மாஸ் காட்டும் சிம்பு - திரையரங்குகளில் மாநாடு

‘மாநாடு’ திரைப்படம் வெளியான மூன்றே நாளில் 20 கோடியை தாண்டி வசூல் செய்து சாதனைப் படைத்துள்ளது.

சிம்பு
சிம்பு

By

Published : Nov 29, 2021, 8:20 AM IST

நடிகர் சிம்பு நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம், 'மாநாடு'. டைம் லுப்பை அடிப்படையாக வைத்து வெங்கட் பிரபு இயக்கிய இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். இதில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே. சூர்யா, பாரதிராஜா, உதயா, பிரேம்ஜி உள்ளிட்டோர் சிறப்பான நடிப்பை நடித்திருந்தனர்.

'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்திற்கு பிறகு இந்தப் படம் மூலம் சிம்பு ஒருமாஸ் ஹீட் கொடுத்திருக்கிறார் என அவரது ரசிகர்கள் தெரிவித்துவருகின்றனர்.

Also Read:Maanaadu: பாக்ஸ் ஆபிஸ் வசூல் இவ்வளவா?

இந்நிலையில் பல போராட்டங்களுக்குப் பிறகு வெளியான 'மாநாடு' திரைப்படம், பாக்ஸ் ஆஃபீஸில் சக்கப்போடு போட்டு வருகிறது. இதனிடையே படம் வெளியான மூன்றே நாளில் தமிழ்நாட்டில் மட்டும் 22 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாகப் படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார்.

இதேபோன்று சென்றால் இன்னும் ஒருசில நாள்களில் 'மாநாடு' திரைப்படம் 100 கோடி ரூபாய் மேல் வசூல் செய்க்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க:’மாநாடு’ படத்துக்கு வந்த அடுத்த சிக்கல்!

ABOUT THE AUTHOR

...view details