தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

''இரண்டு நண்பர்களை இழந்துவிட்டேன்'' - பாடலாசிரியர் விவேக் உருக்கம்

பாடலாசிரியர் விவேக் தன்னுடைய 2 நண்பர்களை ஒரே நாளில் இழந்துவிட்டதாக உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பாடலாசிரியர் விவேக்
பாடலாசிரியர் விவேக்

By

Published : May 26, 2021, 3:43 PM IST

தமிழ்நாட்டில் கரோனா தொற்றின் 2ஆவது அலையின் தாக்கம் அதிகரித்திருக்கிறது. இதனைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் நாள்தோறும் பலரும், இந்த நோய்த்தொற்று காரணமாக உயிரிழக்கின்றனர்.

இந்நிலையில் பாடலாசிரியர் விவேக் தன்னுடைய 2 நண்பர்களை, ஒரே நாளில் இழந்துவிட்டதாக ட்வீட் செய்துள்ளார்.

அதில், "எனக்கு மிகவும் நெருக்கமான இரண்டு நண்பர்களை ஒரே நாளில் இழந்துவிட்டேன். இந்தப் பதிவு உங்கள் அனைவரையும் பயப்பட வைப்பதற்கு அல்ல.

இந்தக் கடினமான காலத்தை யாரும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்ற அக்கறையில் தான் இதை வெளியிட்டேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details