சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று (டிசம்பர்12) தனது 70வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
எழுபது இளமையின் பெருமை: ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்த வைரமுத்து
சென்னை: ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு கவிஞர் வைரமுத்து தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Rajinikanth
அந்தவகையில், கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில், "கலை உலகில் என் அணுக்கமான நண்பர்கள் சிலருள் நெருக்கமான ஒருவர் ரஜினிகாந்த். எழுபதைத் தொடுகிறார். எழுபது என்பது முதுமையின் இளமை அல்லது இளமையின் பெருமை. உடல் நலத்தோடும் மன வளத்தோடும் பல்லாண்டு வாழ தொலைபேசியில் வாழ்த்தினேன். மகிழ்ச்சி; எனக்கும் அவருக்கும்" என பதிவிட்டுள்ளார்.