சென்னை :சிறு வயது முதலே பியானோ வாசித்து உலகை பிரமிப்பில் ஆழ்த்தியவர் லிடியன் நாதஸ்வரம். சென்னையை சேர்ந்த இவர், 2019ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடைப்பெற்ற ’தி வேர்ல்ட்ஸ் பெஸ்ட்' என்ற பொழுத்துப்போக்கு நிகழ்ச்சியில் வேகமாக பியானோ வாசித்து அசத்தினார்.
பிழையில்லாமல், துணிச்சலாகவும் விவேகமாகவும் வாசித்த லிடியனின் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலான நிலையில் பல பிரபலங்களும் ஆச்சரியமடைந்து தங்களது சமூகவலைதள பக்கங்களில் பகிர்ந்து பாராட்டினர்.
இளம் இசைக் கலைஞரான லிடியன் நாதஸ்வரம் தற்போது இசையமைப்பாளர் இளையராஜாவிடம் பயிற்சி பெறும் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில், “நாள்தோறும் தனக்கு இசைப் பயிற்சியை அன்புடனும், அக்கறையுடனும் இளையராஜா கற்றுத் தருகிறார். இளையராஜா தனது ஒரே மாணவன் என்று தனக்கு அங்கீகாரம் கொடுத்துள்ளார்” எனப் பதிவிட்டுள்ளார். தற்போது மோகன்லால் நடிக்கும் புதிய படத்திற்கு இவர் இசையமைத்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : அட அட.. விமான நிலையத்தில் ராஷ்மிகா!