ராஜமௌலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர் உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துவரும் திரைப்படம் 'RRR'. கரோனா சூழலால் ஒத்திவைக்கப்பட்ட இதன் படப்பிடிப்பு, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மீண்டும் தொடங்கியது. தற்போது இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
சுதந்திர போராட்ட வீரர்கள் அல்லுரி சீதாராம ராஜூ, குமரம் பீம் ஆகிய இருவரின் வாழ்க்கையை மையமாக வைத்து RRR' திரைப்படம் உருவாகிவருகிறது. சினிமா ரசிகர்கள் இந்தப் படத்தின் டீசரை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த வேளையில், சமீபத்தில் இப்படம் இந்தாண்டு அக்டோபர் மாதம் 13ஆம் தேதி வெளியாகும் என கூறி ரசிகர்களை படக்குழுவினர் ஆச்சரியப்படுத்தினர்.