நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் உள்ளிட்டோர் நடித்துள்ள டாக்டர் திரைப்படம் நீண்ட இடைவேளைக்குப்பிறகு இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
கரோனா இரண்டாம் அலையால் முடங்கிகிடந்த திரையரங்குகள் திறக்கப்பட்ட பிறகு ஹவுஸ் ஃபுல் காட்சிகளாக ஓடும் முதல் படம் என்ற பெருமையை டாக்டர் பெற்றுள்ளது.
இந்நிலையில் இப்படம் ரிலீஸாவதில் நேற்று நள்ளிரவு (அக்.9) சிறிய தகராறு ஏற்பட்டுள்ளது. படத்தை வெளியிட அனைத்து ஏற்பாடுகளும் செய்த நிலையில் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் இப்படத்துக்காக வாங்கிய கடனில் 27 கோடி செட்டில் செய்தால் தான் படத்தை ரிலீஸ் செய்ய விடுவோம் எனக் கூறியுள்ளனர்.
இந்த விவகாரத்தைக் கேள்விப்பட்ட சிவகார்த்திகேயன், கடன்காரர்களிடம் பேசியுள்ளார். இருப்பினும் அவர்கள் சமாதானமாகவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் சில முன்னணி தயாரிப்பாளர்கள் தானாக முன் வந்து சிவகார்த்திகேயனிடம் ஒரு கால்ஷீட் கொடுத்தால், மொத்த பணத்தையும் செட்டில் செய்து விடுகிறோம் என்று கூறியுள்ளனர்.
இதில் சிவகார்த்திகேயன் இறுதியாக லைகா நிறுவனத்திற்குச் சம்மதம் தெரிவித்துள்ளார். லைகா நிறுவன மேற்பார்வையாளர், தமிழ் குமரனிடம் நிலைமையை எடுத்துச் சொன்னானுடன் சுமார் இரண்டரை மணி நேரத்தில் படத்தை ரிலீஸ் செய்ய ஏற்பாடு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:டாக்டர் படத்திற்கு வாழ்த்து தெரிவித்த பிரபலங்கள்