தமிழ் சினிமாவில் 'மாநகரம்', 'கைதி', 'மாஸ்டர்' என ஹாட்ரிக் வெற்றிப் படங்களைக் கொடுத்தவர், லோகேஷ் கனகராஜ்.
இவர் கமல்ஹாசனை வைத்து 'விக்ரம்' என்ற படத்தை இயக்கி வருகிறார். இது கமல்ஹாசனின் 232ஆவது படமாகும். 'விக்ரம்' படத்தின் இசை வெளியிட்டு உரிமையை சோனி நிறுவனம் பெற்றுள்ளது.
'விக்ரம்' படப்பிடிப்பு ஜூலை 16ஆம் தேதி தொடங்கப்பட்டது. இதில் கமலுடன் பகத் பாசில், விஜய் சேதுபதி, நரேன், ஷிவானி, காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
'விக்ரம்' படத்தை கமலின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார். கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்து வருகிறார். இப்படம் அடுத்தாண்டு கோடை விடுமுறை கொண்டாட்டமாக ஏப்பரல் மாதம் திரையரங்கில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.
விக்ரம் படத்தின் படப்பிடிப்பு சென்னை, காரைக்குடி உள்ளிட்டப் பல இடங்களில் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் இசை வெளியிட்டு உரிமையை சோனி நிறுவனம் பெற்றுள்ளது.
கமல்ஹாசன் நவம்பர் 7ஆம் தேதி தனது பிறந்த நாளைக் கொண்டாடவுள்ளார். இந்நிலையில், அவருக்கு பிறந்த நாள் பரிசளிக்கும் விதமாக 'விக்ரம்' படத்தின் முதல் கண்ணோட்டத்தைப் படக்குழுவினர் இன்று (நவம்பர் 6) வெளியிட்டுள்ளனர்.
40 செகன்ட் ஓடும் வீடியோவில், கமல்ஹாசன் சிறையில் இருக்கும் தனது நண்பர்களுடன் தப்பித்து செல்லுவது போல் காண்பிக்கப்பட்டுள்ளது. மேலும் கமல் இதில் ஸ்டைலிஷாக காண்பிக்கப்பட்டுள்ளார். இதைப்பார்த்த அவரது ரசிகர்கள் பெரும் ஆரவாரத்தில் உள்ளனர்.
'விக்ரம்' படத்தின் க்ளிம்பஸ் வீடியோ வெளியானதையடுத்து படக்குழுவினருக்கு கமல்ஹாசன் அன்புக்கு நன்றி என ட்வீட் செய்துள்ளார். 'விக்ரம்' படத்தின் க்ளிம்பஸ் வீடியோ படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்திருப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: பகத் பாசில் பிறந்தநாள் - வாழ்த்திய விக்ரம் படக்குழு!