சினிமா ரெண்டெஸ்வஸ், கிரீன் காட்டெஸ்ஸெஸ் அமைப்புகள் இணைந்து 'லாக் டவுன் லவ்' என்ற தலைப்பில் குறும்படப் போட்டி நடத்தவுள்ளன.
இதில் ஊரடங்கு உத்தரவு காலத்தில் உங்களுக்கு மன மகிழ்ச்சி தந்த நிகழ்வுகள், செயல்கள், போன்றவற்றை உள்ளடக்கிய கருவை அடிப்படையாகக் கொண்டு குறும்படம் அல்லது ஆவணப்படம் எடுக்க வேண்டும்.
இதில் புனையப்பட்ட கதை, உண்மைச் சம்பவக் கதை, சுற்றுச்சூழல், நட்பு, உறவுகள், தோட்டங்கள் போன்ற பல்வேறு பிரிவுகளில் மூன்று நிமிடங்களுக்கு மிகாமல் குறும்படம் இருக்க வேண்டும்.