தமிழ்நாட்டில் கரோனா பெருந்தொற்றால் ஏற்பட்டுள்ள சவால்களை சமாளிக்கவும், மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நன்கொடை வழங்கிட வேண்டுமென்று முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்நிலையில் திரைப்பிரபலங்கள், தொழிலதிபர்கள், பல்வேறு அரசியல் கட்சியினர், பொதுமக்கள் உள்ளிட்டோர் நிதியுதவி வழங்கி வருகின்றனர்.
முதலமைச்சரின் பொது நிவாரண நிதி: ரூ. 10 லட்சம் வழங்கிய இயக்குநர் லிங்குசாமி
சென்னை: கரோனா தடுப்புப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இயக்குநர் லிங்குசாமி ரூ.10 லட்சம் வழங்கியுள்ளார். இதனை அவர் நடிகர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து வழங்கியுள்ளார்.
Lingusamy
அந்தவகையில், கரோனா தடுப்புப் பணிகளுக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு திரைப்பட இயக்குநர் லிங்குசாமி இன்று (மே 31) ரூ. 10 லட்சம் வழங்கியுள்ளார். இந்த நிவாரண நிதியை அவர் சட்டப்பேரவை உறுப்பினரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து வழங்கியுள்ளார்.